உலகின் முட்டாள் பிரதமர் யாரென்று பிரபல தேடுதல் இயந்திரமான கூகுளில் தேடினால், இந்திய பிரதமர் மோடியின் படங்கள் அதிகளவில் வருகிறது.
தேடுதல் இயந்திரமான கூகுளில் கடந்த சில வாரங்களுக்கு முன், உலகின் முதல் 10 குற்றவாளிகள் யார் என்று தேடிய போது பிரதமர் மோடியின் படங்கள் தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தை அடுத்து, கூகுள் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மீண்டும் கூகுள் தேடுதல் இயந்திரத்தின் மூலம் உலகின் முட்டாள் பிரதமர் யாரென்று தேடினால், எண்ணில் அடங்கா மோடியின் புகைப்படங்கள் வருகிறது.
இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், Daily Pakistan என்ற பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
மோடியின் படங்கள் மட்டுமல்லாமல், அவுஸ்திரேலிய பிரதமர் டோணி அபாட், பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன், கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆகியோரின் படங்களும் சிறிதளவில் இடம்பெற்றுள்ளன.
