சென்னை சில்க்ஸை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்..!

சென்னை தி.நகரில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸில் முஸ்லிம் பெண் திருடி விட்டதாக கூறி புர்காவை கிழித்து அடித்து இழுத்து சென்றுள்ளனர்.

இதை கண்ட அப்பகுதி முஸ்லிம்கள் சென்னை சில்க்ஸ் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினரும், சென்னை சிலக்ஸ் உரிமையாளரும் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களிடமும், சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

சோதனையிட்டதில் முஸ்லிம் பெண் திருடவில்லை என்பது நிரூபணமானது.
அதன்பின்னர் முஸ்லிம் பெண்ணிடம் எல்லைமீறிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸின் மீது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது, கடையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் பொட்டு வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -