மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டி நடாத்தப்படுகின்றது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடாத்தப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைவயின் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக தேர்தல் நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தார்.

போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தால் அந்த அறிக்கையை சாதகமாகக் கொண்டே மஹிந்த ஆட்சியை கைப்பற்றுவார்.

இது குறித்து மேற்குலக நாடுகள் ஜனாதிபதியை அறிவுறுத்தியிருந்தன.

செப்டம்பர் மாதம் விசாரணை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. சில வேளைகளில் இந்த அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் ஊடகங்களுக்கு கசியக் கூடும்.

எனவே விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலை நடாத்தத் தீர்மானித்தார்.

மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகளை கருத்திற் கொண்டும் ஜனாதிபதி தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -