ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
கொழும்பு நகரில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் விதவைகள் மற்றும் விவாகரத்துப் பெற்ற பெண்களுக்கு புனித ரமழான் நோன்பு காலத்தையொட்டி உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று(07) முற்பகல் நடைபெற்றது.
தனை கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பு மாவட்டத்தில் விதவைகளும், விவாகரத்துப் பெற்ற பெண்களுமாக 12 ஆயிரம் பேர் வரை இருப்பதாக உத்தேசமாக கணிப்பிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், முதற்கட்டமாக கொழும்பு நகரில் 1500 வரையிலான இத்தகைய பெண்மணிகளை அடையாளம் கண்டு நிரல்படுத்துவதற்கு அநேக பள்ளிவாசல்களின் நிருவாகிகளின் ஒத்துழைப்பு கிடைத்ததாகவும் கூறினார்.
இதுபற்றி அமைச்சர் ஹக்கீமிடம் வினவிய போது, ,வ்வாறு முஸ்லிம் கைம் பெண்களையும், விவாகரத்து பெற்ற பெண்களையும் முதன்மையாகக் கொண்ட குடும்பங்கள் நாடெங்கிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குடும்பச் சுமையை சுமந்து கொண்டவர்களாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பற்றிய சரியான கணிப்பீடு மேற்கொள்ளப்படாதது கவலைக்குரியதென்றும் சுட்டிக்காட்டியதோடு ,த்தகைய சமூகப் பணி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

