நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது- மஹிந்தவிடம் கூறிய மைத்திரி!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது” என தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்டவிடம் வினவிய போது, இது தொடர்பில் தனக்கு தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் நேற்று இரவு 11 மணிவரையில் மஹிந்த ராஜபக்சவுடனே இருந்தேன். எனினும் அவ்வாறான ஒரு தொலைபேசி அழைப்புகள் வரவில்லை என அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழப்படாதென உடனயாக நாட்டிற்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிக்குமாறும், அநுர பிரியதர்ஷன யாப்பாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அக்கட்சியில் அல்லது வேறு கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவாளர்கள் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -