இப்பிராந்தியத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம் - தயாவின் புத்திரர் சமிந்த

எம்.வை.அமீர்-

டந்த காலங்களில் அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமலேயே ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இப்பிராந்திய இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கிய நாங்கள் பலமான அரசாங்கத்தை அமைத்து, அதனூடாக தொழில்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கி நமது பிராந்தியத்தை செழிப்படைய வைக்கக எல்லோரும் ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே அவர்களின் புத்திரர் சமிந்த கமகே.

ஐக்கிய தேசியக் கட்சியின் சாய்ந்தமருதுக்கான கிளைக்காரியாலயம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார். முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சரின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார செயலாளரும் மருதம் கலைக்கூடலின் தலைவருமான அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் 2015-07-27 ம் திகதி இடம்பெற்ற கிளைக்காரியாலய திறப்புவிழாவில் தொடர்ந்து உரையாற்றிய சமிந்த கமகே, தனது தந்தையார் இனவாத மற்றும் மதவாதமாற்றவர் என்றும் சகலரையும் சமமாக மதிப்பவர் என்றும் தெரிவித்தார்.

கடந்தகால அரசின் இரும்புப்பிடிக்குள் சிக்கியிருந்த இலங்கை மக்களை மீட்டடுத்த ஐக்கிய தேசியக் கட்சி, குறுகிய கால இடைவேளைக்குள் பல்வேறு வரப்பிரசாதங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார். வேறுபாடின்றி மக்களை சமமாக மதிக்கும் எனது தந்தையான தயா கமகே போன்ற சிறந்தவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர் ஐக்கிய தேசியக்கட்சியை மதிக்கும் ஒவ்வொருவரும் இன பேதமின்றி தயா கமகே அவர்களுக்கும் தெரிவு வாக்குகளில் ஒன்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். மீனும் இருண்ட யுகத்துக்கு நாட்டை இட்டுச்செல்லாது புத்திசாதுரியமாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களான சட்டத்தரணி அப்துல் ரஸ்ஸாக் மற்றும் யூ.எல்.ஆதம்லெப்பே போறோரும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அசீஸ் ஹசன் உட்பட பெரும்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -