நம் நாடு நற்பணிப் பேரவை மகிழ்வுடன் வழங்கிய ஈழத்து இசைமுரசு கலைக்கமலின் 33வது கீத் ராத் இசை முரசு ஈ.எம் ஹனீபா பாடல் சமூக ஜோதி இயற்றிய சன்மார்க்க கீதங்கள் அண்மையில் கொழும்பு ஜே.ஆர் ஜெயவர்தன மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமீர் கான் இசையமைத்தார். புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம் பெற்ற நிகழ்வுக்கு கலைஞர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக தேசமான்ய அப்துல் கையும் , கலைப்புரவலர் சிவாஜி மௌலானா, டாக்டர் தாசிம் அஹமது. எம்.என்.எம் நபீல், டாக்டர் ரசூல் மன்சூர், அஸ்ரப் அஸீஸ் ,முத்தப்பன் செட்டியார் ஆகிழயோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அதிபர் நாகூர் உம்மா காதர், கௌசலாதேவி கோவிந்தபிள்ளை, பவாசா காசிம், பூமலர் சிவராஜா, ஷெரீன் பசேலா, ஞெய் ரஹீம் ஸகீட் ஆகியோர் கௌரவம் பெற்றனர்.









