ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாவலி அமைச்சராக இருந்த போது பொலன்நறுவையில் வைத்து அவரை கொலை செய்ய கிளைமோர் குண்டை பொருத்தியதாக கூறப்படும் 10 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சேனன் என்ற சிவராஜா ஜோதிவன் அல்லது முகமது சுல்தான் காதர் மெய்தீன் என்பவருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலன்நறுவை மேல் நீதிமன்ற நீதிபதி அமேந்திர செனவிரத்ன இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.
குற்றவாளி விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
