நேரத்தில் 1 வினாடி அதிகமாயிருக்கும் – நாஸா அறிவிப்பு

சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என்கிறோம். அது போல பூமி தன்னைத் தானே ஒரு தடவை சுற்றி முடிப்பது ஒரு நாளாகும்.

பூமியின் இந்த சுழற்சி அடிப்படையில் தான், ஆண்டு, நாள், நேரம் கணக்கிடப்படுகிறது. நேரம் என்பதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று வைத்துள்ளனர். இந்த மணி கணக்கானது நிமிடம், வினாடி என்று பிரிக்கப்பட்டுள்ளது. 60 வினாடி நேரத்தை ஒரு நிமிஷம் என்றும், 60 நிமிடங்கள் என்பதை ஒரு மணி நேரமாகவும் கணித்துள்ளனர்.

மொத்தம் 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும் உள்ளது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரமாகத்தான் இருந்ததாம். கடந்த சில நூற்றாண்டுகளில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்துபோனது. 

ஆண்டுக்கு ஆண்டு பூமி சுழற்சி வேகம் குறைந்ததால் வினாடிகள் நேரம் அதிகரித்து, அதிகரித்து தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேர கணக்காகி விட்டது. இந்த ஒரு நாளில் அதாவது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 86 ஆயிரத்து 400 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது.

இந்த நிலையில் சூரியனில் இருந்து மூன்றாவது கோளாக இருக்கும் பூமியின் வழக்கமான சுழற்சி வேகம் நாளை (ஜூன் 30–ந் தேதி, செவ்வாய்கிழமை) மேலும் குறைய உள்ளது. அதாவது நாளை பூமி தன் வழக்கமான வேகத்தை இழக்கும். இதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமி சுழற்சி வேகம் குறைவதற்கான காரணத்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அலைகளால் புவிஈர்ப்பு விசை அதிகரித்துள்ளது. இந்த புவி ஈர்ப்பு விசை அதிகரிப்பால் பூமி சுற்றும் வேகம் நாளை குறைகிறது. இதன் காரணமாக நாளை கால அளவு 1 வினாடி அதிகமாக இருக்கும்.

பொதுவாக ஒரு நாள் முடியும் போது அதாவது 24 மணி நேரம் முடியும் போது சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரம் (யு.டி.சி) 23:59:59: என்று காட்டும். அடுத்த வினாடி அது 00:00:00 என மறுநாள் கால நேர கணக்கைத் தொடங்கி விடும்.

ஆனால் நாளைய தினம் அப்படி இருக்காது. நாளை 24 மணி நேரம் முடிந்ததும் 23:59:59 என்பதற்கு பதில் 23:59:60 என்று மாறிவிடும். இதன் மூலம் நாளை 1 வினாடி அதிகரித்து விடும். இந்த 1 வினாடி நேரத்தை குறைத்து சரி செய்யப்போவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அறிவித்துள்ளது.

பூமியின் சுழற்சி வேகம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம் என்கிறார்கள். இது அடுத்த 100 கோடி ஆண்டுகளில் பூமியில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமது கற்பனைக்கும் எட்டாததாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -