நிஸ்மி, அக்கரைப்பற்று-
அக்கரைப்பற்று எஸ்.எல்.எம்.மொஹிதீன் பவுண்டேஸனால் ஏற்பாடு செய்யப்பட்ட வருமானம் குறைந்த உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கான எஸ்.எல்.எம்.மொஹிதீன் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (30) அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பவுண்டேஸன் அலுவலகத்தில் இடம் பெற்றது.
எஸ்.எல்.எம்.மொஹிதீன் பவுண்டேஸன் தலைவரும் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான அல்-ஹாஜ் ஏ.உமர் லெவ்வை தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பவுண்டேஸனின் தவிசாளரும் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம், அல்-ஹாபிஸ் எம்.ஐ.எம்.சித்திக் (அல்-ஹஸ்ஹரி - கெய்Nhh) பவுண்டேஸன் செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.பி.அப்துல் ஹமீட், பணிப்பாளர் எம்.எச்.ஜெய்னுதீன் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.சஹாப்தீன், அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலயம், பள்ளிக்குடியிருப்பு பாயிஷா மஹா வித்தியாலய அதிபர்கள், புலமைப் பரிசில் பெறும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வருமானம் குறைந்த உயர் தரம் கற்கும் சாதாரண தரப் பரீட்சையில் சிறந் பெறுபேறுகளைப் பெற்ற கணித, விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 09 பேர், வர்த்தகப் பிரிவு 09 பேர், கலைப் பிரிவு 08 மொத்தமாக 26 மாணவ, மாணவிகளுக்கு மாதாந்தம் தலா 2000.00 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு இந்த உதவித் தொகையினை பவுண்டேஸனின் தவிசாளரும் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம் தனது தந்தை எஸ்.எல்.எம்.மொஹிதின் அவர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பவுண்டேஸன் முலம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குகின்றார்.
தலைமையுரையைத் தொடர்ந்து பவுண்டேஸனின் தவிசாளரும் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம், அல்-ஹாபிஸ் எம்.ஐ.எம்.சித்திக் (அல்-ஹஸ்ஹரி - ) ஆகியோரின் சிறப்புரையைத் தொடர்ந்து புலமைப் பரிசிலுக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை முதலியவற்றை எஸ்.எல்.எம்.மொஹிதீன் பவுண்டேஸன் தலைவரும் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான அல்-ஹாஜ் ஏ.உமர் லெவ்வை, அதன் தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர முன்னாள் பிரதி மேயருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம், பவுண்டேஸன் செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.பி.அப்துல் ஹமீட், அல்-ஹாபிஸ் எம்.ஐ.எம்.சித்திக் (அல்-ஹஸ்ஹரி - ) எப்.பி.ஸி நிறுவன முகாமைத்துவப் பணின்னாளர் எம்.எம்.றியாட், பணிப்பாளர் எம்.எச்.ஜெய்னுதீன் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.சஹாப்தீன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.





