வடமேல் முதலமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இக்பால் அலி-

குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதற்கு வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை அதனை மூடி மறைத்து விட்டு பெரும்பான்மையின பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ள வடமேல் மாகாண சபை முதல் அமைச்சருக்கு எதிராக எதிர்வரும் 7 ஆம் திகதி பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக சட்ட நடவடிகக்கை எடுக்கவுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷh அறை கூவல் விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்தினைத் தெரிவிக்கையில்;

குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் பாரியளவிலான ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இது தொடாபாக பல தடவைகள் மாகாண சபையில் பல ஆலோசணைக் கூட்டங்கள் நடத்தி இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளையும் டிப்ளோமா பயிலுனர் ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்வதற்காக ஒரு இணக்கபாட்டை முன் வைத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அந்தவகையில் அரச சேவை ஆணைக்குழு ஊடாக ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி பயிலுவிப்பதற்கு ஆசிரியர்களாக பட்டதாரி ஆசிரியர்களையும் டிப்ளோ பயிலுநர் ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்வதற்காக திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப நிதி அமைச்சினால் இதில் 423 பேர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வழங்குவதற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் மாஹோ கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானப் பாடத்திற்கான ஆசியர்களுக்கான வெற்றிடங்கள் இல்லை. மூன்று ஆரம்பப் பாடசாலைகளுக்கான வெற்றிடங்களே உள்ளன எனவும் குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மொத்தத் தொகையாக ஏழு பேருக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் மட்டுமே நிலவுதாக வடமேல் மாகாண சபையின் இணைத்தளம் தெரிவித்துள்ளது. ஆனால் குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் 300 பேருக்கும் கணிசமாளவு ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

எனவே இந்த அநியாயத்திற்கு எதிராக வடமேல் மாகாண சபையில் எதிர்வரும் ஏழாம் திகதி பிரேரணையை முன்வைக்கவுள்ளதுடன் இதற்கான சட்ட நடவடிக்கையும் எடுக்கவுள்ளோம்.

வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று ஒரு முகத்தைகாட்டி கொண்டு இன்னொரு முகத்தை முஸ்லிம்களுடைய கல்வி வளர்ச்சிக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றார். இதுதான் அவருடைய அரசியலின் வெளித்தோற்றப்பாடாகும் என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -