ஜம்இய்யத்துஸ்ஸபாப் நிறுவனம் பார்வை குறைந்தவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்களை நடாத்தி அதன் மூலம் மூக்கு கண்ணாடிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை மேற் கொண்டுவருகின்றது
இதன் ஒரு செயற்திட்டம் காத்தான்குடியில் (14.6.2015) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் வேண்டுகோளின் பேரில் அந்த அமைப்பின் அனுசரணையுடன் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில்,
ஜம்இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உதவி செயலாளருமான மௌலவி எம். எஸ். எம். தாஸீம், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் இணைப்பாளர் வாரிஸ் அப்துல் ஜாவித் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 400 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.



