கலைமகன் -
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகரகாரியால திறப்பு விழாவும் வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கலும் இன்று கல்முனையில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.சாஹுல் ஹமீட் அவர்களின் அழைப்பின் பேரில் சமுர்த்தி ,வீடமைப்பு பிரதியமைச்சர் கௌரவ M.S,S. அமீர் அலி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.சாஹுல் ஹமீட், வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகார பணிப்பாளர் பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






