அம்பாறை மாவட்டத்தில் தனது காலை ஆழப்பதிக்கிறது எமது கட்சி - எம்.எஸ்.சுபைர்

-அபூ - இன்ஷாப்

அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் எமது கட்சியின் தலைமைத்துவத்திடம் விடுத்த ஏகோபித்த அழைப்புக்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது பணிகளை அம்பாறை மாவட்டத்துக்கு விஷ்தரித்த தமது காலை ஆழப் பதித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தர்.

சம்மாந்துறையில் நேற்று (13) நடைபெற்ற தையல் பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் சஹீல் ஏ காதர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவம் முஸ்லீம் சமூகத்துக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதே அங்கெல்லாம் சென்று அந்த மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்தியாக இன்று எமது சமூகத்தில் காணப்படுகின்றார்.

அவர் இந்த மாவட்டத்துக்கு வருகின்ற போதெல்லாம் இங்குள்ள மக்கள் உங்களது பணியினை அம்பாறை மாவட்டத்துக்கும் விஷ;தரிக்குமாறு கோரிவந்தனர் அதனை ஏற்றுக் கொண்டு எமது ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்துக்காகவும் தம்மை அற்பணித்து வருகின்றார் இந்த அடிப்படையிலேதான் அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று எமது கட்சிப் பணிகளை முன்னெடுத்த வருகின்றது.
எமது கட்சியின் தலைமைத்துவம் வடபுலத்திலிருந்து விரட்டப்பட்டு அகதிமுகாம்களிலே தெருவோரங்களிலே இரவுப் பொழுதுகளைக் கழித்த அந்தக் கஷ;டத்தை முழுமையாக அனுபவித்தவர் கொஞ்ச நஞ்ச காலங்களல்ல 25 வருடகாலம் துண்பங்களை அனுபவித்த மக்களுடைய துயர் துடைத்து வருபவர்.

காலத்துக்கு காலம் வரும் பொட்டணி வியாபாரிகளை போன்ற அரசியல் காலத்துக்கு மட்டும் வந்து மக்களை சூடேற்றுபவர் அல்லர் மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்படுபவர்.

இன்று எமது மக்கள் பலதரப்பட்ட கஷ;டங்களை அனுபவித்து வருகின்றனர் கல்வி,சுகாதாரம், வாழ்விடம் போன்றவற்றில் இந்த விடயத்தில் அவர்களின் வாழ்வாதார விடயங்களை சரியான முறையில் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டியுள்ளது.

முஸ்லீம் சமூகத்தின் தலைவர்கள் என்று தங்களை இணங்காட்டிக் கொண்டவர்கள் முஸ்லீம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்க வக்கில்லாதவர்களாக வாய்மூடி மௌனிகளாக கதிரைகளைச் சூடாக்கி கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் தன்னம் தனியனாக நின்று முஸ்லீம் சமூகத்துக்கு குரல் கொடுக்கும் ஒருவராக செயற்பட்டு வருகின்றார் அவ்வாறு செயற்படும் தலைமைகளை நாம் பாதுகாக்க வேண்டும் அவர்களுக்காக நாம் பிராத்திக்க வேண்டும்.

எமது மக்களுக்கு பிரச்சினை வரும் போது ஒழிந்து ஓடாமல் தலைநிமிர்ந்து சமூகத்தை பாதுகாக்ககூடிய தலைமைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் இன்று திறக்கப்பட்ட தையல் நிலையத்தினூடாக சிறந்த பயிற்சிகளைப் பெற்று தமது வாழ்வாதாரத்தை வளம்படுத்திக் கொள்ள வேண்டும் இதே போன்று இன்னும் பல நிலையங்களை எமது அமைச்சர் றிசாத் பதூர்தீன் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -