அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{
இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் இன்றைய 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான அடக்குமுறைகளும் வண்முறைகளும் நாளுக்கு நாள் மிகவும் தீவிரம் அடைந்து சென்று கொண்டிருந்த மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வந்ததனை நாம் எழிதில் மறந்துவிட முடியாது.
அப்படியான ஒரு அசாதாரண சூழ்விலையில் எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பலதைப் பதிவு செய்து காட்டும் வகையில் ஒருத் தேர்தலுக்கு முகம் கொடுக்கச் செய்தான் அந்த சந்தர்ப்பத்தினை நாடளாவிய ரீதியில் நாம் நன்றாகப் பயன்படுத்தியதன் காரணமாக நமது பலம் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு முறைப் பதிவு செய்யப்பட்டது.
அதன் பயனாக கடந்த 2015-01-08 ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்ச்சி மாற்றம் நம் நாட்டில் அனைத்தின மக்களும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிம்மதியாக வாழ வாழி வகுத்தது எனக் குறிப்பிடலாம். இந்த குறுகிய கால ஆட்ச்சியினை நாம் நல்லாட்ச்சி என்றே பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தோம். என்றாலும் அதன் இறுதிக்கால கட்டத்தில் முஸ்லிம் விரோத இயக்கமாகிய பொது பள சேனாவின் செயற்பாடுகளும் அதன்போது நல்லாட்ச்சித் தலைவர் மைத்ரி அவர்களிடம் காணப்பட்ட மௌனமும் அவருக்கும் முன்னாள் தலைவர் மஹிந்த அவர்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை என்பதனை நமக்கு உணர்த்தியது.
இதற்கிடையில் அரசாங்கம் பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு முன்வந்துள்ளதானது எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பலத்தினை மீண்டும் ஒரு முறை இந்த நாட்டுக்குப் பறை சாட்டுவதற்காக வழங்கியுள்ள அரியதோர் சந்தர்ப்பமாகும்.
இந்நிலையில் ஒவ்வொரு கட்;சியும் தாம் மட்டும்தான் யோக்கியர்கள் தங்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஊர் ஊராகக் கூக்குரலிடுவார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சில முஸ்லிம் கட்ச்சிகளும் அரசியல் பிரமுகர்களும் தமக்கு பிச்சைப் போடும் பேரினவாதக் கட்ச்சிகளைக் கவ்விக் கொண்டு தாங்கள்தான் இலங்கை முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவே முஸ்லீம்கள் நாங்கள் சொல்கின்ற கட்ச்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் கூப்பாடு போடுவார்கள். இவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்துக்காக அல்லது கோளைத்தனத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் அடகு வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதனை நாம் நன்கு தெரிந்தே வைத்துள்ளோம்.
இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் . எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் மற்றும் சமய ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை காணாமல், முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்.
இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 67 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றன, இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன என்பதனை நாமனைவரும் நன்கு அறிவோம், இலங்கை முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இவையனைத்திற்கும்; முதல் முக்கிய காரணம் முஸ்லிம்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியாகவும், ஆன்மீகரீதியாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து காணப்படுவதாகும். அவர்கள்;. எப்பொழுது எக்காலத்திற்கும் பொருத்தமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபடுவார்களோ அன்றுதான் நம் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் நம்பிக்கைமிக்க, அச்சமில்லா எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்ற சமுதாயமாக மாறுவார்கள்.
முஸ்லிம்களை எந்தவொரு அரசியல்வாதியோ, கட்சியோ, இயக்கமோ, குழுவோ பாதுகாக்க முடியாது. மாறாக இஸ்லாமும் அதன் கொள்கைகளும்தான் இலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல உலக முஸ்லிம்களையே பாதுகாக்கவல்லது இதுதான் ஒரு உண்மை முஸ்லிமுடைய விசுவாசமுமாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் இனம், மதம், சமூகம், தேசியம், பிரதேசம், இயக்கம், கட்ச்சி என்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் செயல்படும் எந்தவொரு தனிமனிதனோ, குழுவோ, இயக்கமோ, அரசியல் கட்சியோ எம்மைப் பாதுகாக்கவோ, எமது உரிமைகளை வென்று தரவோ போவதில்லை என்பதுதான் உண்மை. எனவே எந்நிலையிலும் நாம் நமது வாக்குகள் சிதறடிக்கப்பட அனுமதிக்கக் கூடாது.
எனவே நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் நாம் ஏதோ ஒரு அடிப்படையில் எமது கருத்து முறன்பாடுகளை புறந்தள்ளி நாடளாவிய ரீதியில் நமது பிரதிநிதித்துவங்களை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல் அவசியமாகும்;. அதற்கான அரியதோர் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தினை நாம் தவற விட்டு விடுவோமானால் நிச்சயமாக அது நமது துர்ப்பாக்கியமேயாகும்.
எமது நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பலவேறு கட்ச்சிகளில் போட்டி இடும் போது நிச்சயமாக நாம் நமது பிரதிநிதித்துவங்களில் கணிசமான அளவு இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலையையே அது மீண்டும் தோற்றுவித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்நிலையிலிருந்து நம் சமூகத்தை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பும், கடமையும் நமக்குண்டு அந்த வகையில் நாமனைவரும் ஒன்றுபட வேண்டியது காலத்தின் மிக முக்கிய தேவை மட்டுமின்றி எமது கடமையுமாகும் என்றால் அது மிகையாகாது. இதனை மறுக்கும் பட்சத்தில் நம் சமூகம் இன்னும் இன்னும் கோழைகளாகவும், பலஹீனர்களாகவும் ஆக்கப்படுவதிலிருந்து யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
வல்ல அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)
இங்கு வல்ல அல்லாஹ் மூன்று முக்கிய விடயங்கள் பற்றி வலியுறுத்துகின்றான்.
அவைகளாவன:
1. அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாக வழிப்பட்டு நடக்க
வேண்டும்
2. எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விடக்கூடாது
3. அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுவதிலும், கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற வேளைகளில் பிரிந்து விடாதிருப்பதிலும் பொறுமையைக் கைகொள்ளுதல்.
இவைகளுக்கு மாறு செய்யும் போது ஏற்படவுள்ள அபாயங்கள் இரண்டினையும் வல்ல அல்லாஹ் அதன் தொடரில் அறிவுறுத்துகின்றான்.
1. கோழைகளாகி விடுதல்.
2. பலம் குன்றி பலஹீனர்களாகி விடுதல்.
இதனைத்தான் இன்றைய இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது போலும்.
இன்னும் வல்ல அல்லாஹ் எமது ஒற்றுமையின் அவசியம் பற்றி கூறும் போது:
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103)
மேற்படி ஒரே வசனத்தில் ஒற்றுமையினை வலுப்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிட்ட வல்ல அல்லாஹ் அதன் தொடரிலேயே பிரிந்து விட வேண்டாம் என்று எச்சரிப்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அத்துடன் இந்த வசனங்களின் மூலம் வல்ல அல்லாஹ் இன்னும் சில முக்கிய விடயங்களையும் எமக்குக் கட்டளையிடுகின்றான்.
அவைகளாவன.
1. ஒவ்வொரு தனிமனிதனும் தக்வா சார்ந்த வாழ்க்கையினை வாழ்தல்.
2. மரணம் வரைக்கும் முஸ்லிமாகவே செயல்படுதல்.
3. அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபட்டிருத்தல்.
4. எந்நிலையிலும் பிரிந்து விடாது ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து கொள்ளுதல்.
5. அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்பேறுகளை நினைவு கூர்தல்.
மேற்படி இறைவசனங்களிலிருந்து இன்றைய எமது பலஹீனத்திற்கான காரணங்களை எம்மால் எழிதில் புரிந்து கொள்ள முடிகின்றது. அதுதான் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய மனப்பான்மை காரணமாக ஏற்பட்டுள்ள ஒற்றுமையிண்மை, மற்றும் கட்டுப்படாமையாகும், எனவே நாம் நமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள், சுயகௌரவம், கட்ச்சி பேதம் போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக் கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில்; ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும், கட்டாய கடமையுமாகும்.
கட்ச்சியா? சமூகமா? என்ற நிலை ஏற்பட்டால் நாம் எதனைத் தெரிவு செய்வது என்பதில் நாம் தெளிவு பெற வேண்டு. விகிதாசார பிரதிநிதித்துவம் என்பது நமது பிரதிநிதித்துவத்தினை அடைந்து கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பும் நமது பலத்தினை நாடளாவிய ரீதியில் பதிவு செய்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமுமாகும்;. இத்தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பல தசாப்த்தங்கள் கடந்த பின்னரும் நாம் இன்னும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்பது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் மட்டுமின்றி அது நமது அரசியல் ஞானசூன்யத்தின் அடையாளமுமாகும்.
இந்நிலையில் நாம் இம்முறையாவது நமது ஒற்றுமையினை உறுதி செய்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளோம். இந்தப் பாரிய பொறுப்பிலிருந்து நாம் யாரும் விடுபட முடியாது. “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும்” என்பது நபி வாக்காகும். எனவே நமது பொறுப்புக்களை சரிவர புரிந்து நமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் நமது அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பள்ளி வாயிற்களின் நிருவாகிகள், இமாம்கள். சமூக சேவை சங்கங்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் போன்ற அனைவரும் ஓரணியில் நின்று அனைத்து முஸ்லீம்களது வாக்குகளையும் சிதற இடம் கொடுத்து விடாது முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய முன் வருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன் - ஜே.பி
