சிறுபான்மையினர் நலனில் ஜாதிக ஹெல உறுமயவுக்கு எந்த அக்கறையும் கிடையாது - அமைச்சர் ஹக்கீம்

புதிய தேர்தல் முறைமையானது, எல்லோரும் ஏற்றுக் கொள்கிற ஒரு தீர்வாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல், எங்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒரு தேர்தல் முறையாக அது இருக்கக் கூடாது. இதனால் தான், இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முடிவில்லாமல் இருக்கிறது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு நாங்கள் காலை வாரிவிடுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அதனை நிறைவேற்றவிடாமல் காலைப்பிடித்து இழுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தத் தேவையும் கிடையாது 20ஆவது திருத்தத்தில் எங்களது ஆலோசனைகளையும் உள்வாங்குமாறு தான் நாங்கள் கேட்கிறோம். அதனை நிராகரித்தால் நாங்கள் எதிர்ப்போம்'. 

பதுளை மாவட்டத்தில் வெலிமடைத் தொகுதியில் பொரகஸ், வியலுவ தொகுதியில் கலஉட ஆகிய கிராமங்களில் நீர் விநியோகத்திட்டங்களுக்கான அங்குராப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சனிக்கிழமை (06) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

பொரகஸ் நீர் விநியோகத்திட்டத்திற்கு 325 இலட்சம் ரூபாய்களும், கலஉட நீர் விநியோகத்திட்டத்திற்கு 180 இலட்சம் ரூபாய்களும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதுளை மாவட்ட மத்திய குழு இவற்றை ஏற்பாடு செய்திருந்தது. ஊவா மாகாண சபை அமைச்சர்களான ரவி சமரவீர, வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபை முதல்வர் ஆர்.எம்.ரத்நாயக்க ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, ஊவா மாகாண தேசிய நீi; வழங்க்ல மற்றும் வடிகாலமைப்புச் சபை பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஐ.ஏ.லதீப் எட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றும் பொழுது கூறியவையாவன,ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இவ்வாறானதோர் ஆட்சிமாற்றம் வரும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை இவ்வளவு இலகுவாக ஒழித்துக்கட்ட முடியுமென எவரும் நம்பியிருக்கவில்லை. ஆனால், அந்த ஊவா மாகாண தேர்தல்தான் புதிய ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய திருப்புமுனை அமைந்தது.

ஹரீன் பெர்ணாந்து தனது பாராளுமன்ற ஆசனத்தை துறந்து விட்டு ஊவா மாகாண சபைத் தேர்தலில் குதித்த போது மஹிந்த ராஜபக்ஷவின் கோடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் வாக்களித்தனர்.

முந்திய ஆட்சியில் நாங்களும் பங்காளியாக இருக்க நேர்ந்து. நாங்கள் அதற்கு இணங்கியிருக்கா விட்டால் எங்கள் கட்சியை நாசமாக்கியிருப்பார்கள்.மஹிந்த ராஜபக்ஷவின்  அரசாங்கத்திலிருந்து கொண்டே, நானும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனும் எங்களது கட்சிகளை பதுளை மாவட்டத்தில் களத்தில்  இறக்கினோம். அதற்கு எங்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

அந்த அரசாங்கம் செய்த அநியாயங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எங்களது எதிர்ப்பைக் காட்டத் தான் நாங்கள் வேறாகப் போட்டியிட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போதும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாகவும் நாம் முடிவு செய்ததோடு, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கடந்த ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து புதிய ஆட்சி மலர்ந்து விட்டது, அநீதி அழிந்துவிட்டது.

இப்பொழுது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு நாங்கள் காலை வாரிவிடுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அதனை நிறைவேற்றவிடாமல் காலைப்பிடித்து இழுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தத் தேவையுமில்லை. 20ஆவது திருத்தத்தில் எங்களது ஆலோசனைகளையும் உள்வாங்குமாறு தான் நாங்கள் கேட்டோம். அதற்கு இணங்காவிட்டால், அதனை நிராகரித்தால் நாங்கள் எதிர்ப்போம்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்திற்கும் இதேகதி நேர்ந்தது. 19ஆவது திருத்த்திற்கும் சில மாற்றங்களைச் செய்தார்கள். பின்னர் அது நிறைவேற்றப்பட்டது.

19ஆவது திருத்தம் பற்றி மக்களுக்கு அப்பொழுது போதிய தெளிவு இருக்கவில்லை. உண்மையில் 19ஆவுது திருத்தத்தினூடாக பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதனால் முக்கியமாக ஜனாதிபதிக்கு இருந்த அபரீதமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, சர்வாதிகாரத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டு விட்டது.

19ஆவது திருத்தத்தின் மூலம் ஆறு வருடங்கள் இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாக குறைத்தது மட்டுமல்ல, ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் அந்தப் பதவிக்கு போட்டியிட முடியாததும் ஒரு முக்கியமான அம்சமாகும். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் ஒரு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருப்பது அவர் அறவே பதவி மோகம் அற்றவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவருவதையிட்டு நாமனைவரும் அவருக்கு அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

20ஆவது திருத்தத்ததை பொருத்தமட்டிலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு அதுதான். ஆனால், அந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கின்றார்.

20ஆவது திருத்தத்தை பொறுத்தவரை மலையக இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பதுளை போன்ற மாவட்டங்களில் அவர்களது விகிதாசாரத்திற்கும், பரம்பலுக்கும் ஏற்றவாறான பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறான விஷயங்களில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதனால் என்னை விமர்சிக்கின்றனர்.

19ஆவது திருத்தத்தத்தினூடாக ஏற்பட்ட மற்றுமொரு நன்மை அமைச்சர்களின் எண்ணிக்கையை முப்பது ஆகக் குறைத்தது, தேசிய அரசாங்கமொன்றால் நாற்பதாக அமைச்சுக்களின் தொகையை அதிகரிக்கலாம். முன்னர் என்ன நடந்தது மற்றக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை காவு கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை அள்ளிக்கொடுத்து ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டது. சொந்த குடும்ப நலன்களுக்காக நாடு குட்டிச்சுவராக்கப்பட்ட அராஜக ஆட்சி தொலைந்து நல்லாட்சி மலர்ந்துள்ளது.

இப்பொழுது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகின்றார்கள். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்படும் முன்னாள் ஜனாதிபதிக்கு சாதகமாக சிலர் இதற்குக் காரணமாக இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் ஒரு பனிப்போர் மூண்டுள்ளது.

நாளைக்கு என்றாலும் பாராளுமன்றத்தை கலைத்து விடச் சொல்லுங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டியதில்லை. நாங்கள் எப்பொழுதும், எந்நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம். துணிச்சல் இருந்தால் தேர்தலுக்கு வரும்படி எதிர்க்கட்சியைக் கோருகின்றோம்.

தேர்தல் நடந்தால்தான் சக்தி வாய்ந்த அரசாங்கமொன்று ஏற்படும். பலமான ஸ்திரமான அரசாங்கம் அமைந்தால்தான் நாடு முன்னேரும். முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். வெளிநாட்டு முதலீட்டார்கள் அரசாங்கம் ஸ்திரமானதா என்பதைத் தான் முதலில் பார்ப்பார்கள்.

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியாகும் என நம்புகின்றோம். ஆனால், அதற்கு முன்னர் அரசாங்கத்தின் நூறுநாள் செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஜனாதிபதி தீவிர கவனஞ் செலுத்தி வருகின்றார்.

நூறுநாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் செலவு குறைப்பு உட்பட பல முன்னேற்றகரமான காரியங்கள் நடந்துள்ளன என்றார்.

டாக்கர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்,ஷபீக் ஹுஸைன்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -