கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழா!

ல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் நகர அபிவிருத்தி, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்;தார்.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் உள்ளிட்ட கல்விமான்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
ஹாசிப் யாஸீன், அஸ்ஹர் இப்றாஹிம்-






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -