புலிபாந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக புகார்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முப்பது முதுரை மரங்களை வட்டார வன இலாகா அதிகாரிகள் செவ்வாய்கிழமை மாலை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.

புலிபாந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் புலியாந்தகல், மூக்கர்ரகல், பொண்டுகல்சேனை போன்ற பகுதிகளுக்கு றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பொண்டுகல்சேனை பகுதியில் இம்முதுரை மரக்குற்றிகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் தப்பிச்சென்று விட்டதாகவும் வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து சட்டவிரோத மரக்கடத்தல் காரர்கள் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -