ரவூப் ஹக்கீமை சாடிய முஸம்மிலின் கருத்து முட்டாள்தனமானது உலமா கட்சி முபாறக் அப்துல் மஜீட்

ஊப் ஹக்கீம் ஐ எஸ்ஸின் முகவராக இருக்கலாம் என்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளரான முஸம்மிலின் கருத்து முட்டாள்தனமானது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, கிழக்கில் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை கரையோர மாவட்டம் என்பது தமிழ் பேசும் மக்களுக்கான நிர்வாக மாவட்டமே தவிர வேறு எதுவித விசேட அதிகாரமும் அதற்கு இல்லை. 

இது பற்றி முஸ்லிம்கள் 30 வருடங்களுக்கு மேலாக பேசி வருகிறார்கள். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் இலாபத்துக்காக தோதல் காலத்தில் மட்டும் இந்த மாவட்டம் பற்றி பேசி முஸ்லிம்களை மடையர்களாக்கிக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் போது மட்டும் இக்கோரிக்கையை முன் வைப்பதையும் பின்னர் அமைச்சு பதவியை எடுத்த பின் அதனை மறந்து விடுவதையும் உலமா கட்சி தொடராக கண்டித்து வருகிறது. இக்கோரிக்கை முஸ்லிம்களை ஏமாற்றும் வெறும் நாடகம் என்பதை புரியாமல் இக்கோரிக்கை மூலம் ரஊப் ஹக்கீம் ஐ எஸ் உளவாளி என கூறுவது ரஊப் ஹக்கீம் என்ற ஏமாற்று பேர்வழியை கதாநாயகனாக்கும் பிழையான முயற்சியாகும். ஹக்கீமை பொறுத்த வரை ஐ எஸ் என்றால் என்ன என்பது பற்றிய சிறு அறிவு கூட அவருக்கு இருக்காது என்றே நம்புகிறோம்.

முஸ்லிம்கள் ஹக்கீம் மீது வெறுப்புற்றிருக்கும் இந்த நேரத்தில் அவரை ஐ எஸ்சுடன் தொடர்பு படுத்துவது முட்டாள்தனமானது மட்டுமல்ல அவரின் செல்வாக்கை முஸ்லிம் பாமர மக்கள் மத்தியில் உயர்த்தும் மோசமான நடவடிக்கையாகும்.

முஸம்மில் என்பவரின் ஹக்கீம் மீதான பல முன்னைய குற்றச்சாட்டுக்களும் ஹக்கீமின் செல்வாக்கை முஸ்லிம்கள் மத்தியில் உயர்த்துவதாகவே இருந்தன. காரணம் அவை பொய்யான குற்றச்சாட்டுக்களாகும். ஆவற்றை முன்னரும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். 

ஆகவே நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று அரசியலை ஏற்றுக்கொள்ளாத போதும் முஸம்மில் போன்றோரின் இத்தகைய கருத்துக்கள் பிழையானவை என்பதால் சமூகத்தில் ஹக்கீமுக்கு அனுதாப அலை ஏற்பட்டு அவரின் செல்வாக்கை அதிகரித்து முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் நிலையே ஏற்படும் என எச்சரிக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -