தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்தின் குறைபாடுகள் ஆராய்வு

எம்.எம்.ஜபீர்-

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்தின் குறைபாடுகளை கண்டறியும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் நேற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.முனவ்வரிடம் கல்முனை பிரதேசத்தில் நீர் வழங்குதலில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல பிராச்சினைகள் பொறுப்பதிகாரியினால் முன்னவக்கப்பட்டது இதனை கவனத்தில் கொண்ட அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று துரிதமாக தீர்வு பெற்றுதருவதாக வாக்குதியளித்தார். இதன்போது பொறியியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -