எலிகளை விழுங்­கிய பூனைகளைப் போல் வாலை சுருட்டிக் கொண்­டி­ருந்­த­வர்கள் இன்று வீரர்­க­ளாகி வாய் திறக்­கின்­றனர்!

கே.பி. தலை­மையில் 22 புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் கோத்தபாயவுடன் பேச்சு நடத்­திய போது எலிகளை விழுங்­கிய பூனைகளைப் போல் வாலை சுருட்டிக் கொண்­டி­ருந்­த­வர்கள் இன்று வீரர்­க­ளாகி வாய் திறக்­கின்­றனர் என நேற்று சபையில் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமை ச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. தேசிய பாது­காப்பு தொடர்­பாக முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே அமைச்சர் மங்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளோடு நான் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதை பெரி­து­ப­டு த்தி அதற்­கெ­தி­ரான கருத்­துக்­களை அபே­ராம குழு வெளி­யிட்டு வருகிறது.

விமல் வீர­வன்ச இதில் முன்­ன­ணியில் உள் ளார். ஒரு சிலர் நீதி­மன்றம் செல்லப் போவ­தாக கூறு­கி­றார்கள்.

ஆனால் இன்று புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளோடு பேசு­வ­தற்கு எதி­ராக கூச்­ச­லி­டு­கின்­றனர். அன்­றைய ஆட்­சி­யிலும் அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள். அப்­போது கே.பி. தலை­மையில் 22 புலம் பெயர் தமிழ் அமைப்­புக்­களை சேர்ந்தோர் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்­டனர். அன் றைய பாது­காப்பு செய­லாளர் கோ­த்தபாய ராஜ­பக் ஷ இவ் அமைப்­புக்­க ளோடு பேச்சு நடத்­தி­யுள்ளார்.

அது மட்­டு­மல்ல புலி­க­ளுக்கு சர்­வ­தேச ரீதியில் நிதி சேக­ரித்த தர்­ம­லிங்கம் யோகேஸ்­வரன் என்­ப­வரை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சந்­தித்து பேச்சு நடத்­தினார்.
இன்று கூச்­ச­லி­டுவோர் அன்று எலி­களை விழு ங்­கிய பூனை­களைப் போல் வாலை சுருட்டிக் கொண்டு மெள­ன­மாக இருந்­தனர்.

வாலை சுருட்டிக் கொண்­டி­ருந்­த­வர்கள் இன்று வீரர்­க­ளாகி விட்­டனர். புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுடன் அர­சியல் தீர்வு தொடர்­பா­கவோ யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் தொடர்­பா­கவோ பேச­வில்லை.

மாறாக இலங்­கையின் அபி­வி­ருத்தி புலம்­பெ­யர்ந்­த­வர்­களின் நிபு­ணத்­து­வத்­தையும் பங்கு பற்றுதலையும் பெற்றுக் கொள்­வது தொடர்­பா­கவே பேசினோம்.

யுத்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பாக உள் ளக விசாரணைகளே நடத்தப்படும். இந்த தீர்மான த்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

அதேவேளை உள்ளக விசாரணைக்கு சர்வ தேசத்தின் உதவிகள் மட்டுமே பெற்றுக் கொள் ளப்படும் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -