ராஜித அமைச்சர் அண்மையில் கூறி இருந்தார் அமைச்சர் ஹகீம் பதவிக்காக மதத்தையும் மாற்றி கொள்வர் என்று ராஜித அவர்கள் கூறினர். அமைச்சர் ராஜித அவர்களே நீங்கள் 2004 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியில் போட்டி இட்டீர்கள் ??
ஏன் 2005 -06 ஆண்டு மஹிந்தயுடன் இணைந்துகொண்டீர்கள் வெங்காயம் உரிப்பதற்கா ??
அமைச்சு பதவியை பெற்று கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை காட்டியும் கொடுத்தீர்கள் பின் 2010 இல் உங்களுக்கு பின் அரசியலுக்கு வந்த ரோஹித அபெகுனவர்தனவுக்கு மஹிந்த உங்களை விட அவருக்கு அதிகளவான இடம் கொடுக்கின்றார் என்ற படியால் உங்களுக்கும் முன்னால் ஜனாதிபதிக்கும் அடிக்கடி முட்டிகொண்டது அனைவருக்கும் அறிந்த விடயமே.
நீங்கள் அமைப்பாளராக இருக்கும் பேருவளை தொகுதியில் முஸ்லிம்களுக்கு அநீதி இளைக்க பட்ட போது நீங்கள் எங்கோ வெளி நாட்டில் இருந்தீர்கள் உங்களுக்கு அளுத்கம தீமூட்ட பட இருக்கின்றது என்று தெரிந்துதான் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறி நின்றீர்களோ யாருக்கு தெரியும்.
நீங்கள் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு விமர்சிப்பது அனாவசியமானது ஹக்கீமின் 15 வருட கட்சி தலைமையில் பெரும்பான்மை காலம் எதிர்க்கட்சி அரசியல்தான் என்பது யாவரும் அறிந்த உண்மையே
மைத்திரிபால ஜனாதிபதி ஒன்றும் பத்துலட்சம் வாக்குகள் கூடுதலாக்க பெற்று ஜனாதிபதியாக இல்லை வெறும் நான்கு லெட்சம் வாக்கு வித்தியாசமே ஒருவேளை நாடளாவிய ரீதியில் 300000 வாக்குகளை கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தால் ஒருவேளை நீங்கள் காணமல் போய் இருப்பீர்கள்
இரவோடு இரவாக தேர்தல் திருத்தம் என்ற பெயரில் நீங்கள் சிறுபான்மையினரின் உரிமையை கொள்ளை அடிக்க முயலும் போது அதனை தட்டிகேட்டால் பதவிக்காக மதம் மாறுவார் என்பது உங்களின் இயலாமையே காட்டுகின்றது.
