குருநாகல் முதல்வர் வீடு மற்றும் முஸ்லிம் கடை மீது தாக்குதல்!

குருநாகல் கெட்டுவான வீதியில் அமைந்துள்ள மாநர முதல்வர் காமினி பேரமுனகேவுடைய இல்லம் மற்றும் அவர் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் தம்புள்ள வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபருடைய ஒரு சில்லறைக் கடை மற்றும் வௌகெதரவிலுள்ள வீடு ஒன்றும் நள்ளிரவு 12 .30 மணி அளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

வெளிநாடு சென்று இருந்த முதல்வர் அன்றைய தினம் தான் வீடு திருமியிருந்தார். இனந்தெரரியாக நபர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது அக்கம் பக்கத்திலிருந்து எழுந்து வந்ததால் இந்தக் குழுவினர் தலைமறைவாகி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை முதல்வரின் இல்லத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள முஸ்லிம் நபருடைய சில்லறைக் கடையை முற்றாச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் வௌகெதரவிலுள்ள வீடொன்றுக்கும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இக்பால் அலி
(குருநாகல் பிரதான நிருபர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -