ஊடகவியலாளரும் கவிஞருமான சுஐப் எம்.காசிம் எழுதிய 'வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை (06.06.2015) மாலை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையிலும் நடைபெறும்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு விருந்தினராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பசீர் சேகுதாவூத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறப்பு அதிதிகளாக அச்சு, இலத்திரனியல் ஊடக ஆசிரியர்கள் பங்கு கொள்கின்றனர். கலாநிதி எம்.எஸ்.அனீஸ் நூலை ஆய்வு செய்ய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் சிறப்புரையாற்றுவார்.
தேசமான்ய டபிள்யூ எம்.யஹ்யான் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார். சமூகஜோதி ரபீக் வரவேற்புரை நிகழ்த்த கலைஞர் கலைச்செல்வன் நூலாசிரியரை அறிகம் செய்வார். சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் வாழ்த்துரையும் ஊடகவியலாளர் ஏ.ஸீ.எம்.தௌபீக் கருத்துரையும் வழங்குவார்.

