ஜனாதிபதி தேர்தலில் 600.000 பேர் வாக்களிக்க தவறியுள்ளனர்!

2015 ஜனாதிபதி தேர்தலில் சமூகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்த 600.000 பேர் வாக்களிக்க தவறியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஆடம்பர வீடுகளிலும், அடுக்குமாடிகளிலும் வாழ்பவர்கள் ,தங்களுடைய வாக்காளர் படிவத்தை நிரப்பி கிராமசேவையாளரிடம் கையளிப்பது குறித்து அக்கறை காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்வதற்காக வழங்கப்பட்ட காலத்தின் போது இவர்கள் எவரும் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ளவில்லை. ஆனால் தேர்தலுக்கு பின்னர் முறைப்பாடுகளை செய்தனர்

இதேபோன்று குடிசைகளில் வாழ்பவர்களும் கடந்த தடவை தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை இழந்தனர்.அவர்களுடைய விழிப்புணர்வின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே இது நிகழ்ந்தது அவர்களும் முறைப்பாடு செய்தனர்.

இவர்கள் மீண்டும் தங்களை பதிவு செய்து கொள்ளவில்லை, அடுத்த தேர்தலிலும் இவர்கள் வாக்களிக்க முடியாத நிலை தோன்றலாம்,

பொதுத்தேர்தல் இவ்வருடம் நவம்பர் மாதத்திற்குள் இடம்பெற்றால் அவர்களில் பலர் மீண்டும் வாக்களிக்கும் வாய்ப்பை இழப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -