ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிறுவுனர் மறைந்த இமாம் கொமைனியின் 26வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் கலாசாரப் பிரிவு நேற்று (04) கொழும்பு-07 இல் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலியும் கௌரவ அதிதியாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் பதில் தூதுவர் இப்ராஹிம் ஹானி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப்பாவா பாறுக், அஸ்லம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் விஷேட பேச்சாளராக சட்டத்தரணி மசூம் மௌலானா கலந்து கொண்டு இமாம் கொமைனி இஸ்லாமிய வரலாற்றில் ஆற்றியபணி மற்றும் அவரது வரலாற்றுப் பார்வை தொடர்பாக விளக்கத்தினை வழங்கினார்.
நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளும் இமாம் கொமைனி தொடர்பாக உரையாற்றினர்.







