சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (22) முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
நாளைய தினம் கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் சபாநாயகர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
உத்தேச 20ஆம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றில் முன்வைப்பது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவுள்ளதாக பொதுசன ஐக்கிய முன்னணி தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.(ந)
