(ஊவா) ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு!

எஸ்.சிவகாந்தன்-

வா மாகாணத்தின் 81 தமிழ்மொழி மூல பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெருந்தோட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட 599 ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண தமிழ்க்கல்வி , தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் வடிவேல் சுரேஷின் தலைமையில் இன்று (29) பதுளை நூலக சேவை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாகாண அமைச்சர் ஆனந்த குமாரசிரி மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஜயந்த கன்னங்கர , ஆர்.எம் ரட்னாயக முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.எல் ராஜதாச, மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டு பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -