ஜேர்மனியில் இளம்பெண் ஒருவர் தனது காதலரையே கடித்து குதறிய சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜேர்மனியில் உள்ள ஹேகன் நகரை சேர்ந்த லாரா என்ற 26 வயது பெண், கெவின் என்ற 39 வயது நபரை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
கெவின் அந்த வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பூனை அவரது காதலியான லாராவை கடித்துள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த லாரா அந்த பூனையை அடக்கிவைக்க முயன்றுள்ளார்.
ஆனால் அது முடியாமல் போனதால் அந்த பூனை பற்றி காதலர் கெவினிடம் சண்டை போட்டுள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட சண்டை முற்றியதால், லாரா தனது காதலரை கடித்து குதறியுள்ளார்.
அதிலிருந்து தப்பித்து கெவின் பொலிசாருக்கு தகவல் அளிக்கு முயன்ற போது அவரது போனை லாரா பிடுங்கிவைத்துள்ளார்.
பின்னர், எப்படியோ அவரிடமிருந்து தப்பி பொலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, விரைந்து வந்த பொலிசார் கெவினை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது அந்த பெண், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு 10 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.(ந)

