ஒபாமாவின் காபி குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய உள்துறை அமைச்சரின் மனைவி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் சில்வன் ஷாலோமின் மனைவி ஜூடி ஷாலோம், வானொளி மற்றும் தொலைக்காட்சிகளில் வாராந்திர நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவர் தனது ட்விட்டரில், ஒபாமாவின் காபி பற்றி உங்களுக்கு தெரியுமா? அது கருப்பு மற்றும் வீக்கானது என்று ட்விட் செய்தார்.
அவரது டவிட்டை பார்த்த பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்ததால் அதனை அழித்துள்ளார்.
அதன் பிறகு ஜூடி தனது ட்விட்டரில் ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அதிபர் ஒபாமா, நான் கேள்விப்பட்ட ஜோக்கை எழுதியிருக்கக் கூடாது.
இனம், மதத்தை தாண்டி எனக்கு மக்களை பிடிக்கும். யாரோ என்னிடம் கூறிய முட்டாள்தனமான ஜோக் அது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.(ந)

