பிரபல தொலைக்காட்சியிலிருந்து டிடி சென்றதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், அண்மையில் விஜய் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சொதப்பியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திவ்யதர்ஷினியை நீக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்ததாகவும், இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிடி, அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், டிடிக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை என்றும், டிடி கர்ப்பமாக இருப்பதால்தான் அவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -