அந்-நூர் மகா வித்தியாலய சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு!

றியாஸ் ஆதம்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20ஆவது மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிகள் கடந்த 13ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விளையாட்டுப்போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்துக்கொண்டது.

நடைபெற்று முடிந்த விளையாட்டுப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஏ. ஹாதிக் என்ற மாணவன் முதலாமிடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டார். 

13வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் எ.ஜே.எப். சனப் என்ற மாணவி முதலாமிடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினையும் பெற்றார். பெண்களுக்கான 100மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டியில் எஸ்.எல். சர்மிலா இரண்டாம் நிலையை பெற்று அடைவுமட்டத்தை அடைந்தார் .

இப்பாடசாலை வரலாற்றில் மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களான ஆர்.ஹாறூன், ஜே.பஸ்மிர் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சாதனையாளர்களுடன் இணைந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் வீரர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது சாதனையாளர்கள் பேன்ட் வாத்திய முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதனையும் சாதனை படைத்த வீரர்களையும் ஆசிரியர்களையும் மார்க்ஸ்மேன் விளையாட்டுக்கழகத்தினால் கௌரவிக்கப்படுவதனை படத்தில் காணலாம்.(ந)








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -