எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு பிரதமர் பதவி வகிப்பதற்கான தகுதி காணப்படுவதாகவும் நாடாளுமன்றில் ஒரு தரப்பினர் அதனை ஆட்சேபித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ரணில் விக்ரமசிங்க மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்தியில் அதிருப்தி காணப்படுவதினால், அவர்களின் வரப்பிரசாதம் கிடைத்த ஒருவரை பிரதமராக்குவதற்கு ஜனாதிபதி திர்மானிக்க வேண்டும் எனவும்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை அமைத்து கொள்வதற்கு மைத்திரிபால சிறிசேன முயற்சித்தால் எதிர்க்கட்சியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
