வாழைச்சேனை பாசிக்குடா கடலில் நீராடும் போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சோக சம்பவம் புதன்கிழமை மாலை; இடம் பெறறுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கலேவெல கனாதென்ன பிரதேசத்தில் இருந்து ஒரு பஸ்ஸில் 33 பேர் புதன்கிழமை காலை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாசிக்குடாவுக்கு வருகை தந்த வேலை அதில் வந்த எஸ்.ரீ.துஸான் துலன்ஜய (வயது 23) என்ற இளைஞர் பாசிக்குடா கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

