புழுதியுடன் சூறைக்காற்று: இலங்கை விமானம் தரையிறங்காமல் பெங்களூர் சென்றது!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புழுதியுடன் சூறைக்காற்ரு வீசியதால் சென்னை வந்த இலங்கை விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 

இலங்கையிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு 164 பயணிகளுடன் ´லங்கன் ஏர்லைன்ஸ்´ விமானம் சென்னை விமான நிலையத்துக்கு சென்றது. 

விமானம் தரையிறங்கும் நிலையில், விமான நிலைய சுற்று வட்டார பகுதியில் திடீரென பலத்த வேகத்துடன் சூறைக்காற்று வீசியது. புழுதியும் கிளம்பியது. இதனால் ஓடுபாதை தெரியவில்லை. 

விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபற்றி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் உடனடியாக விமானத்தை பெங்களூரு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பினர். 

அங்கு விமானம் தரை இறங்கியது. பின்னர் சூறைக்காற்று வேகம் குறைந்து காணப்பட்டது. இதன் பின்னர் இரவு 10.30 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு பத்திரமாக வந்து பயணிகளை இறக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -