உத்தேச தேர்தல் முறை திருத்தம் குறித்து நாளை பாராளுமன்றில் விவாதம்!

த்தேச தேர்தல் முறை திருத்தம் குறித்து பாராளுமன்றில் இரண்டு நாள் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளை மாலையும் நாளை மறுநாள் காலை 9.30 தொடக்கம் 6 மணிவரையும் விவாதம் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். 

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றில் இடம்பெற்றது. 

இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பிலும் அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பிலும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மங்கள சமரவீர தொடர்பான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -