கண்டி - கொட்டுகொடல்ல பகுதியில் அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கிவந்த வெளிநாடு நாணயமாற்று மத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கியின் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் நேற்று மாலை இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
சுற்றிவளைப்பின் போது குறித்த நிலையத்தில் இருந்து 2,21,309 ரூபா வெளிநாட்டு நாணயம் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.(ந)
