இலங்கை மின்சார சபை நிந்தவூர் கிளையின் கவனத்திற்கு..!

 முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்

நிந்தவூர் 3ம், பிரிவுக்கு தேவையான மின்சாரங்களை வழங்குவதற்காக வேண்டி மின்சார சபையினால் நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் மின்மாற்றி கருவியானது (transformer) கொங்றீட் தூண்கள் நிறுத்தப்பட்டு சுமார் 7 அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

ஆனால் தற்போது அந்த மின்மாற்று கருவியை தாங்கிக்கொண்டிருக்கும் கொன்றீட் தூண்கள் செயலிழந்து மிகவும் மோசமான நிலையில் உடைந்திருப்பாதனால் மேலே உள்ள மின்மாற்றி கருவியானது எந்த சந்தர்ப்பத்திலும் கீழே விழுவதற்கு சாத்தியங்கள் உண்டென்பதை அறியலாம்.

மேலும் இந்த மின்மாற்றி கருவியை தாங்கிக்கொண்டிருக்கும் கொங்றீட் தூண்கள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்தும் அதனை இதுவரைகாலமும் புணரமைக்கப் படாதமையினாலேயே இது பாதுகாப்பற்ற முறையில் உடைந்து கிடக்கின்றது.

ஆகவே இலங்கை மின்சார சபையே அல்லது அரசியல் அமைப்புக்களோ இதனை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் மின்மாற்றி கருவியை வைத்தியசாலைக்கு முன் பொருத்தப்பட்டிருப்பது பாதுகாப்பானதல்லயென்பதனையும் கருத்தில்கொண்டு இந்த மின்மாற்றி கருவியை வேறு இடத்திலோ அல்லது இதனை பாதுகாப்பான முறையில் புணரமைக்குமாறு நிந்தவூர் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -