மாளிகவத்தை: பலகை வீட்டில் 1600 குடும்பங்கள் (கண்கலங்கும் மக்கள்)

அஸ்ரப் ஏ சமத் -


மாளிகாவத்தையில் உள்ள அப்பில் தோட்த்தில் 1600 குடும்பங்கள் கடந்த 30 வருடகாலமாக முடுக்கு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இக் குடும்பங்கள் பலகை வீடுகளிலும் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்கின்றனர்; 

உலகிலே பாரிய வளர்ச்சி கண்ட நகரமாக கொழும்பு அபிவிருத்தி கண்டாலும் மாளிகவாத்தையில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் பரம்பரை பரம்பரையாக முடுக்கு வீடுகளிலேயே வாழ்கின்றனர்.

இந்த சமுகத்தின் வாழ்வாதார வீட்டுப் பிரச்சினையை எந்தவொரு அரசியல்வாதியும் தீர்வு பெற்றுத் தரவில்லை. 

நாங்களாகவே வீடொன்றைக் கட்டிக் கொள்ள வசதியில்லாமல் இருக்கின்றோம். யாராவது உதவ வந்தாலும் கொழும்பில் பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் எங்களது மலசல கூடத்தைக் கூடக் நிர்மாணிப்பதென்றாலும் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபைகளில் அனுமதி என்ற போர்வையில் எங்களை இந்த பாதாள உலக யுகத்திற்கே எங்களையும் எங்களது பரம்பரையினரையும் இட்டுச் செல்கின்றனர். என அப்பிரதேச குடியிருப்பு பென் கண்கலங்கி கூறுகின்றார்.

என இன்று அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைமையமான நாரேகேண் பிட்டியில் நடைபெற்ற ஊடக மாநாட்டில்; முன்ன்ணியின் உப தலைவர் பாருக், பொருளாளர் சாம் நாவாஸ் மாளிகாவத்தை முஸ்லீம் லீக் தலைவர் எம். இசாக் ஆகியோறும் கருத்து தெரிவித்தனர்.

இம்மக்கள் இம்முறை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்காக 95 வீதமாக வாக்களித்தவர்கள். புதிய பிரதமர் வீடமைப்பு மற்று நகர அபிவிருத்தி அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் ;இப்பிரதேச மக்கள் தமக்கென வீடொன்றில்லாமல் மிகவும் கஸ்டத்திலும் வாழ்கின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் நாளாந்தம், சமுக, பாதுபாப்பின்மை, குற்றங்கள், போதைப்பொருள் போன்ற வற்றிக்கு இப்பிரசத்தில ;வாழும் குடும்பங்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர் 

இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இப்பிரதேசத்திலே தொடர்மாடி வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கபபடுகின்றன, எதிர்காலத்திலும் நிர்மாணித்து இ;ம்;மக்களை குடியேற்றுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

25 அடி கொண்ட பலகை, சிறு வீடுகளுக்குள் 3 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு குடும்பம் வீதியில் அல்லது பாதையோரத்தில் இருக்க இன்னொரு குடும்பம் உள்ளே தூங்குகின்றனர். அவர்கள் காலை எழுந்து தொழிலுக்குச் சென்றவுடன் மற்றைய குடும்பம் தூங்குகின்றனர். உரிய வடிகான் வசதியின்றி மழை காலங்களில் இந்த வீடுகளில் நீர்தேங்கி நின்று எங்களது பிள்ளைகளை வைத்தியசாலைகள் அனுமதித்த சம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.

பெண்பிள்ளைகளை பாதுகாப்பது மிகவும் கஸ்டமாக உள்ளது. பாடசாலை சிறுவர்கள் தமது கல்வியை இடை நடுவில் விடுகின்றனர்;. கடந்த அரசாங்கம் இங்கு வாழ்ந்த 125 குடும்பங்களுக்கு பொரளையில் தொடர் மாடி வீடுகளில் குடியமர்த்தினார்கள். ஏனைய மிகுதியான 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.

இவர்களுக்கு உரிய தொடர் மாடி வீடுகளை அமைத்து கொடுக்குமாறு இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வினயமாக கேட்கின்றோம்.மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நிர்மாணித்த வீடமைப்புத்திட்டத்திற்கு பிறகு கடந்த 30 வருடங்களுக்கு பிறகு எந்தவொரு அரசாங்கமும.தொடர் மாடி வீடமைப்புத் திட்டமும் மாளிகாவத்தையில் ஏற்படுத்தவில்லை.

இதுவரை இந்த புதிய அரசாங்கமோ நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோ இம் மக்களத வாழ்வாதாரப் பிரச்சினைகளை நேரடியாக வந்து பார்வையிடவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் வகித்த போதிலும் ;அவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள சில திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகினற்ன. அவற்றிலாவது எங்களை குடியமர்த்துக்கள் என அம்மக்கள் வினயமாக கேட்கின்றனர். 

மாளிகாவத்தையில் பிறந்து வளர்ந்த மக்களை மாளிகாவத்தையிலேயே குடியமர்த்துக்கள். இல்லா விட்டால் கொழும்பு மத்திய தொகுதி முஸ்லீம் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு தொகுதி இந்த கொழும்பு மாவட்டத்;தில் இல்லாமல் செய்துவிடுவார்கள் எனவும் அங்கு கூறப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -