அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்சங்கத்தின் 8வது வருடாந்த மாநாடு!

வருடாந்தம் இடம்பெறும் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களின் சந்திப்பின் 8வது வருடாந்த சந்திப்பு 2015-06-07ம் திகதி சங்கத்தின் பொதுச்செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் அவர்களது நெறியாள்கையில் மாளிகைக்காடு பிஸ்மில்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த இம்மாநாட்டுக்கு கிழக்கு மாகாணபிரதி அஞ்சல் மா அதிபர் வீ.விவேகானந்தலிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக பிராந்திய நிருவாக அலுவலர் எம்.தம்பிஐயா, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.எம்.ரூபசுந்தர பண்டா, தமிழர் ஆசிரியர் சாங்கத்தலைவர் வீ.ரீ.சகாதேவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் அங்கத்தினரின் பிரசன்னத்துடன் ஆரம்பமான நிகழ்வில் நடப்பு வருடத்துக்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்க செய்திமடலான UPDO NEWS உம் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஒன்று கூடலின்போது அலுவலக பையும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எம்.வை.அமீர் -




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -