ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
பெமிலிஸ் றிலிப் சிறி லங்கா மற்றும் ரெக்டோ நிறுவனங்களின் அனுசரனையுடன் கந்தளாய் பிரதேசத்திலுள்ள 2ம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மகல்லாவுகுட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும்,விதவைகளுக்கும் அங்கவீனர்களுக்குமான உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் தலைமையில் நடைபெற்றது.
350 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளுள் ஒவ்வொரு பொதியும் சுமார் 2800 பெறுமதியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வருடாவருடம் புனித ரமலானை முன்னிட்டு இவ்வாறான ஏழை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுவதோடு அவர்கள் இஸ்லாமிய கடமையினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.


