முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் நாடாளுமன்ற அங்கீகாரதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபைக்கான குடியியல் உறுப்பினர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை ஆறுமுகன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக தாம் முன்னாள் இந்துகலாசார ராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜை தாம் பரிந்துரை செய்வதாக தொண்டமான் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தாம் பரிசீலிப்பதாக ஜனாதிபதி ஆறுமுகனிடம் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நேற்று மஹிந்த ராஜபக்ச தரப்பின் முக்கிய ஆதரவாளராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன. அரசியல் அமைப்பில் சபையில் இந்திய வம்சாவளி ஒருவரும் இணைக்கப்பட வேண்டு;ம் என்று கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியிலேயே தொண்டமானின் கோரிக்கையும் பார்க்கப்படுகிறது.
10 பேரைக் கொண்ட அரசியல் அமைப்பு சபைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று குடியியல் உறுப்பினர்களும் அங்கம் வகிக்க முடியும்.
இதன்படி ஏற்கனவே சர்வவோதயத்தின் தலைவர் ஏ.டி ஆரியரட்ன, ஐக்கிய நாடுகளின் முன்னாள் இராஜதந்திரி ராதிகா குமாரசுவாமி, முன்னாள் நீதியரசர் சலாம் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
