ஏ.எஸ்.எம்.ஜாவித்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் 65வது வருடாந்த மாநாடு அதன் தேசியத் தலைவர் எம்.ரி.தாஸிம் தலைமையில் இன்று (14) கொழும்பு வோர்ட் பிளேசில் உள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ண கலந்து கொண்டதுடன் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் பிராந்தி பணிப்பாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் முஸ்லிம்களின் பிரச்சினைகளின்போது சட்டத்தரணிகளாக ஆஜராகி சேவை செய்த சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்தன, சிறாஸ் நூர்டீன் ஆகியோர் விஷேடமாக நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் பணிப்பாளர்கள், தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதிக்கு அமைப்பின் தலைவர் எம்.ரி.தாஸிம் உள்ளிட்டோரால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேடையில் அமைச்சருடன் அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் தேசிய பொதுக் காரியதரிசி எம்.எஸ்.எம்.றிஸ்மி, குழுத் தலைவர் ஹலீம் அஸீஸ், தேசியத் தலைவர் எம்.ரி.தாஸிம், போசகர் சுஹைர் ஹஸன், தேசிய பொதுச் செயலாளர் எம்.என்.எம்.நப்ஹைல் ஆகியோர் காணப்படுகின்றனர்.



