சீகிரியாவில் குரங்கு இறைச்சி விற்க முயற்சித்த நபரிடம் 20,000 அபராதம்!

சீகிரிய புரான பூமியில் உறக்கிக் கொண்டிருந்த குரங்கை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்ற நபரிடம் 20,000 அபராதம் அறவிடப்பட்டுள்ளது. 

சீகிரிய சுற்றுலா நீதிமன்றில் குறித்த நபர் இன்று (04) ஆஜர் செய்யப்பட்ட போது பதில் நீதவான் ஜயம்பதி ரத்னதிவாகர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

கடந்த பௌர்ணமி தினத்தன்று குரங்கை கொன்று இறைச்சிக்கா விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டை மில்டன் வீரசூரிய என்ற நபர் சந்தேகநபர் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் குரங்கு இறைச்சி மீட்கப்பட்டுள்ளது. 

குற்றத்தை ஒப்புக் கொண்ட நபரை நீதவான் கடுமையாக எச்சரித்து பின் விடுதலை செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -