எஸ்.சிவகாந்தன்-
மடுல்சீமை, மாதோவை தோட்டத்திற்கு 10 இலட்சம் ரூபா செலவில் புதிய பாதை ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷின் நிதியொதுக்கீட்டின் கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் மடுல்சீமை, மாதோவை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட்டிலான புதிய பாதை கடந்த 17.06.2015 அன்று அமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பாரிய பிரச்சினையாக இருந்த இவ் வீதியினை புணரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் விடுத்து வந்துள்ள கோரிக்கைகளுக்கிணங்கவே மேற்படி வீதி புணரமைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ந


