அஹமட் புர்கான் -
தென்கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தர் நியமனமானது இன்றுஅரசியல் ரீதியாக நியமனம் பெரும் ஒரு பதவியாகவே பார்க்கப்படுகிறது. இவ் நியமனத்திற்கு பலரும் போட்டி இட்ட போதும் மூவரின் பெயர்கள் இறுதித் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் தங்களுக்குச் சார்பானவர்களினை உப வேந்தர் ஆக்குவதற்கான முயற்சியில் அரசியற் கட்சிகளிடையே ஒரு அரசியல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஏனைய விடயங்களில் அரசியல் செல்வாக்குச் செலுத்துவது போன்று கல்வி விடயத்தில் செல்வாக்குச் செலுத்தும் போது நாம் மௌனித்திருக்க முடியாது. தகுயற்றவர்கள் தேர்வாகுமிடத்து எமது கல்விச் சமூகம் மிகுந்த பாதிப்பினை அடையும். இப் பாதிப்பானது எமது சமூகத்தின் அனைத்து விடயங்களிலும் எதிர் விளைவினை உண்டாக்கும்.
இதனால் அரசியல் வேறுபாடுகளிற்கு அப்பால் பல புத்திஜீவிகளினால் முன் மொழியப்பட்ட கலாநிதி சபீனா அவர்களினை உப வேந்தராக நியமிப்பது எதிர் கால தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் செயற்பாடுகளிற்கு பொருத்தமாக அமையும். என நிர்மான துறை முதுமாணியும் சமுக சேவையாளருமான கலாநிதி அல் ஹாஜ் UK நபீர் கருத்து தெரிவித்துள்ளார்.
