மேதின நிகழ்வுகளை ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலும் நடாத்தி வரும் NFGG, அதன் மற்றுமொரு மேதின நிகழ்வினை மூதூரில் நடாத்தியது.
கடந்த மே 03 ஆம் திகதி மூதூரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
NFGGயின் மூதூர் பிரதேச செயற்குழுவின் தலைவர் Dr. ஷாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோரும் கலந்துகொண்டு விசேட உரையாற்றினர்.
இந்நிகழ்வில் NFGGயின் மூதூர் பிரதேச செயற்குழு உறுப்பினர்களான MIM.ஜெஸ்மி, M.ஷிப்லி, AM.மாஹிர், MACM.சியாம், M.றினோஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நஜாமுஹம்மட் மற்றும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் நாட்டின் சமகால அரசியல் தொடர்பிலும் NFGGயின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவான விளக்கங்களை வழங்கினர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)