எம்.ஜே.எம்.சஜீத்-
பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கான நிவாரண உதவிகள் சேகரிக்கும் பணி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்டாளைச்சேனை பிரதேச பிரிவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இப்பணி இடம்பெற்று வருகிறது.
இந்த வகையில் அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவின் கிராம சேவகர் யு.எல்.எம். அப்துல்லா தலைமையில் 06 ஆம் பிரிவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்குமாக சென்று நேபாள மக்களுக்கான நிவாரண உதவிகள் சேகரிக்கும் பணி இடம் பெற்றது.
இப்பணியில் அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவின் சிவில் பாதுகாப்பு தலைவர் சலிம் றமிஸ், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.ஜெஸிமா, எம்.எம்.மல்சியா போன்டோரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்பணியில் ஈடுபட்டார்கள்.(ந)
.jpg)
.jpg)