எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-
மட்டக்களப்பு மத்தி வலய பிரிவில் அமைந்துள்ள காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி பயிலும் மாணவி எம்.எஃப். ஷுமைதா ஹினா, 2014ம் ஆண்டில் 201 – 500 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞான பொது அறிவுப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று தனது பாடசாலைக்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியிலும் இம்மாணவி முதலிடத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், காத்தான்குடி 02ம் குறிச்சியைச் சேர்ந்த பிரபல கட்டிடப் பொருட்கள் வர்த்தகரான அல்ஹாஜ் காஸிம் முகம்மது முகம்மது பாயிஸ், அனீஸா பாயிஸ் ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புத்திரியாவார்.(ந)
