முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று காலை விசாரணைகளுக்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையிலேயே அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சத்தொச நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்பது தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
ந,ச